Form 15G இனி இல்லை! புதிய Form 121 என்றால் என்ன? (Bank FD TDS Rules 2026)
நீங்கள் வங்கியில் Fixed Deposit (FD) அல்லது வேறு ஏதேனும் சேமிப்புத் திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், ஏப்ரல் 2026 முதல் வருமான வரித்துறையும் வங்கிகளும் இணைந்து கொண்டுவந்துள்ள ஒரு மிக முக்கியமான மாற்றத்தை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை, வங்கிகளில் நமது வட்டி வருமானத்தில் இருந்து TDS (Tax Deducted at Source) பிடிப்பதைத் தவிர்க்க, நாம் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் Form 15G என்ற படிவத்தை சமர்ப்பித்து வந்தோம். ஆனால், தற்போது ஏப்ரல் 2026 முதல் இந்த படிவம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக 'Form 121' என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த Form 121 என்றால் என்ன? இதை யார், எப்படிச் சமர்ப்பிக்க வேண்டும்? என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
Form 121 என்றால் என்ன?-(What is Form 121 in Tamil?)
Form 121 என்பது வங்கியிடம் நாம் அளிக்கும் ஒரு 'சுய அறிவிப்புப் படிவம்' (Self-declaration form). உங்களது ஓராண்டு மொத்த வருமானம், வருமான வரி கட்டும் வரம்பிற்குள் (Basic Exemption Limit) வராத பட்சத்தில், "எனது வருமானம் வரி கட்டும் அளவிற்கு இல்லை, எனவே எனது Fixed Deposit வட்டி வருமானத்தில் TDS பிடிக்க வேண்டாம்" என்று வங்கிக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கும் படிவமே இந்த Form 121 ஆகும்.
Form 15G-ஐ மாற்றி Form 121-ஐ ஏன் கொண்டு வந்தார்கள்?
வருமான வரித்துறை மற்றும் வங்கிச் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கிலும், வரி செலுத்துவோரின் விவரங்களை எளிதாக ஒருங்கிணைக்கவுமே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
- பழைய படிவத்தில் இருந்த சிக்கலான பகுதிகள் நீக்கப்பட்டு, Form 121 மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
- உங்களது PAN Card மற்றும் ஆதார் எண்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டு, ஆன்லைனில் உடனடியாக அப்டேட் ஆகும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய Form 121-ஐ யார் சமர்ப்பிக்கலாம்? (Eligibility)
அனைவரும் இந்த படிவத்தை சமர்ப்பிக்க முடியாது. இதற்கான தகுதிகள்:
- தனிநபர் (Individuals): நிறுவனங்களோ அல்லது கார்ப்பரேட் அமைப்புகளோ இதைச் சமர்ப்பிக்க முடியாது. தனிநபர்கள் மற்றும் HUF (Hindu Undivided Family) மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
- குடியுரிமை: நீங்கள் இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமகனாக (Resident Indian) இருக்க வேண்டும்.
- வயது: உங்களின் வயது 60-க்கு கீழ் இருக்க வேண்டும். (60 வயதுக்கு மேற்பட்டவர்கள் Form 121-ன் உள்ளே அவர்களுக்கு ஒரு முக்கிய சலுகை உள்ளது).
- வருமான வரம்பு: : உங்களின் வட்டி வருமானம் மற்றும் பிற அனைத்து வருமானங்களையும் சேர்த்தால் வரும் 'மொத்த ஆண்டு வருமானம்' (Total Annual Income), வரி விலக்கு வரம்பை விட குறைவாக இருக்க வேண்டும்.
Form 121-ஐ எப்படி சமர்ப்பிப்பது?- (How to submit Form 121?)
இதைச் சமர்ப்பிப்பது மிகவும் எளிது. உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன:
1. ஆன்லைன் முறை (Online Mode - மிகவும் சிறந்தது):
- உங்களது வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் (Net Banking) அல்லது மொபைல் பேங்கிங் (Mobile Banking App) செயலிக்குள் நுழையவும்.
- அதில் 'TDS Services', 'Tax Centre' அல்லது 'Submit Form 121' என்ற புதிய ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதை க்ளிக் செய்து, உங்களின் PAN விவரங்களை சரிபார்த்து, தோராயமான வட்டி வருமானத்தை உள்ளிட்டு ஒரே க்ளிக்கில் டிஜிட்டல் முறையில் சமர்ப்பித்து விடலாம்.
2. ஆஃப்லைன் முறை (Offline Mode):
ஆன்லைன் வசதி இல்லாதவர்கள், நேரடியாக உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று Form 121 படிவத்தை வாங்கி, அதை நிரப்பி கையெழுத்திட்டு சமர்ப்பிக்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
- PAN Card கட்டாயம்:Form 121-ஐ சமர்ப்பிக்க PAN கார்டு மிகவும் கட்டாயம். PAN கார்டு இல்லை என்றால், அதிகபட்சமாக 20% வரை TDS பிடிக்கப்படும் அபாயம் உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும்:ஏப்ரல் மாதம் நிதியாண்டு தொடங்கியவுடன் (ஏப்ரல் முதல் வாரத்தில்) இதைச் சமர்ப்பித்து விடுவது நல்லது. முன்கூட்டியே சமர்ப்பித்தால் மட்டுமே ஏப்ரல் மாதத்திற்கான வட்டியில் TDS பிடிக்கப்படாமல் இருக்கும்.
- தவறான தகவல்:வரி கட்டும் அளவிற்கு வருமானம் இருந்தும், வரியை மிச்சப்படுத்த பொய்யான தகவல்களுடன் Form 121-ஐ சமர்ப்பித்தால் வருமான வரித்துறையின் அபராதத்திற்கு ஆளாக நேரிடும்.
வங்கி FD-ல் முதலீடு செய்துள்ள நடுத்தர மக்களுக்கும், வரி வரம்பிற்குள் வராதவர்களுக்கும் TDS பிடிப்பதை தவிர்க்க இந்த புதிய Form 121 ஒரு சிறந்த வழியாகும். ஏப்ரல் 2026 முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதால், மறக்காமல் உங்கள் வங்கி கணக்கில் இதை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக